கொத்மலையில் இருந்து பியகம வரையிலான மின் விநியோக பாதையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, முழு நாட்டிலும் மின் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
தடைபட்ட மின் விநியோகத்தை சில மணி நேரத்தில் சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக இலங்கை மின்சார சபை ஊடகப் பேச்சாளர் பொறியியலாளர் நோயல் பிரியந்த குறிப்பிட்டார்.
மேலும், பல பகுதிகளில் மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை மின்சார சபை அறியத்தருகிறது.
மின்தடையை முழுமையாக சீரமைக்க கிட்டத்தட்ட 02 மணித்தியாலங்கள் எடுக்கும் என மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
Island
