உயர் நீதிமன்ற சட்டத்தரணியாக ஒலுவிலூரின் முதலாவது பெண் சட்டத்தரணி - மீராமுகைதீன் பாத்திமா ஹுஸ்னா

Adjust the font size:     

அம்பாறை, ஒலுவில் பிரதேசத்தின் வரலாற்றில் முதலாவது பெண் சட்டத்தரணியான மீராமுகையதீன் பாத்திமா ஹுஸ்னா (LLB, AAL) அவர்கள் கடந்த புதன்கிழமை காலை கொழும்பு புதுக்கடை உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்து
தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.
இவர் ஆரம்பக் கல்வி முதல் உயர்தரம் வரை ஒலுவில் அல் - ஹம்றா தேசிய பாடசாலையில் கற்றவராவார்.
கடந்த 2015 ம் ஆண்டு உயர் தரத்தில் கலைப்பிரிவில் 03 A பெறுபேற்றினைப் பெற்று பேராதனைப் பல்கலைக்கழக சட்ட பீடத்திற்கு தெரிவாகி தனது LLB பட்டத்தினைப் 2021ம் ஆண்டு பூர்த்தி செய்து கடந்த வருடம் 2022 இல் (AAL) Attorney at Law பரிட்சைக்கு இலங்கை சட்டக்கல்லூரிக்கு தோற்றி சித்தியடைந்து சட்டத்தரணியாக தெரிவு செய்யப்பட்டார்.
இவர் மீராமுகையதீன் வட்டானை மற்றும் கதிஜா உம்மா தம்பதிகளின் செல்வ புதல்வியும் மீராலெவ்வை றினாஸ் (SEUSL) அவர்களின் மனைவியும், முகம்மட் மதனி (SEUSL), முகம்மட் மஹீஸ் (Water Board) ஆகியோரின் தங்கையும் ஆவார்.
ஒலுவிலூரின் முதற் பெண் சட்டத்தரணிக்கும் அவரின் பெற்றோர், கணவர், குடும்பத்திற்கும் ஊர் சார்பாக ஒலுவில் ஊடக வலையமைப்பின் உணர்வுபூர்வமான வாழ்த்துக்கள்
- Oluvil Media
How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post