2022 ஆம் ஆண்டில், இலங்கையில் 433 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான அபிவிருத்திக்கான துறைசார் கண்காணிப்புக் குழுவில் தெரியவந்துள்ளது.
நாட்டின் 62 சதவீத நிலப்பரப்பில் காட்டு யானைகள் பரவி இருப்பதாக வனவிலங்கு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
நெற்பயிர்களை பாதுகாக்க சமூக அடிப்படையிலான மின்சார வேலிகள் மற்றும் தற்காலிக மின்வேலிகள் அமைப்பதே யானை - மனித மோதலை குறைப்பதற்கான தீர்வு என அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இதன்படி யானை வேலி அமைப்பதற்கு முன்னர் யானை நடத்தை மற்றும் மனித நடத்தையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
Island
