இந்த வருடத்திற்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 3 நாட்களுக்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (28) இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எதிர்வரும் மே அல்லது ஜூன் மாதத்தில் நடைபெறவுள்ள 2024ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான ஆயத்தங்கள் அனைத்தும் தயாராகிவிட்டதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
Education
