2023 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
இதுவரை பரீட்சைக்கு விண்ணப்பிக்காத மாணவர்களின் நலன் கருதி விண்ணப்ப காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக 2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு எதிர்வரும் 10ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4 ஆம் திகதி முதல் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதி வரை நடத்துவதற்கு பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
Education
