ஊவா, மத்திய, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.
மேல் மற்றும் தென் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் காலை நேரங்களில் மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில், இந்த பகுதிகளில் தற்காலிகமாக காற்று வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்பதற்கு பொதுமக்கள் தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்படுகிறது.
நாட்டைச் சூழவுள்ள கரையோரப் பகுதிகளில் தெற்கு அல்லது தென்மேற்கு திசையில் காற்று வீசும். காற்றின் வேகம் மணிக்கு 20 முதல் 30 கிலோமீட்டர் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பிட்ட இடைவெளியில் மன்னார் ஊடாக புத்தளம் மற்றும் கங்கேசந்துறைக்கு இடையில் கடற்பகுதியில் காற்றின் வேகமானது மணிக்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிற்பகல் 2 மணிக்குப் பின்னர், மன்னாரில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
Island
