அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் ஆசிரியர் தின நிகழ்வுகள் நேற்று பாடசாலையின் கேட்போர் கூடத்தில் விமர்சையாக நடைபெற்றது.
- Mrs.AM.ரஸீத் (ஓய்வு பெற்ற ஆசிரியை)
- Mrs உம்முல் பனீன் (ஓய்வு பெற்ற ஆசிரியை)
- Mrs.MJ.சரூஸா (ஓய்வு பெற்ற ஆசிரியை)
- Mrs.SM.நபீலா உம்மா (ஓய்வு பெற்ற ஆசிரியை)
- Mr.UL.ஜுனைதீன் (ஓய்வு பெற்ற ஆசிரியர்)
- Mr.ST.ஜமால்தீன் (ஓய்வு பெற்ற ஆசிரியர்)
- Mrs.SAM.நஸீர் (ஓய்வு பெற்ற ஆசிரியை)
- Mr.I.பாஹிர் (ஓய்வு பெற்ற ஆசிரியர்)
- Mrs.TA.ஹமீட் (ஓய்வு பெற்ற ஆசிரியை)
- Mr.AL.நௌபர் (ஓய்வு பெற்ற ஆசிரியர்)
ஆகியோரே கௌரவம் பெற்றவர்களாவர்.
காலை சரியாக 9 மணியளவில் கௌரவம் பெறும் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் உட்பட அதிதிகள் யாவரும் மாலை அணிவிக்கப்பட்டு பாடசாலை பிரதான நுழைவாயிலில் இருந்து பாடசாலை பேண்ட் குழுவினரின் வாத்தியம் முழங்க சுற்றிலும் மாணவர்கள் மலர் தூவ ,பாடசாலை கடேற் மற்றும் சாரணிய மாணவர்களின் மரியாதை அணிவகுப்புகளுடன் கேட்போர் கூடத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
கேட்போர் கூடத்தில் மாணவர்கள் ஆசிரியர்கள் புடை சூழ்ந்த சபை முன்னே கௌரவம் பெறும் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கான வாழ்த்துப்பா
சக ஆசிரியர்களால் வாசிக்கப்பட்டதுடன் அவர்களுக்கான வாழ்த்துப்பா கையளிக்கும் நிகழ்வும் பொன்னாடை வழங்குதலும் பொற்கிழி வழங்குகின்ற நிகழ்வும் பாடசாலை அதிபர்,பிரதி அதிபர்,உதவி அதிபர்கள் மற்றும் சிரேஷ்ட ஆசிரியர்களால் நிகழ்த்தப்பட்டது.
அத்துடன் இந்நிகழ்வில் அதிபர்,பிரதி அதிபர் மற்றும் ஆசிரியர்களின் விசேட உரைகளும் இடம்பெற்றதுடன் இடையிடையே ஆசிரியர்களின் இனிமையான பாடல்களும் ஒலிக்கப்பெற்று சபையோரை உற்சாகப்படுத்தின.
இந்நிகழ்வானது இறுதியில் பகற்போசனத்துடன் இனிதே நிறைவு பெற்றது.







