சுங்கத்திற்கு புதிதாக ஆட்சேர்ப்பு

Adjust the font size:     

138 உதவி சுங்க அத்தியட்சகர்கள், 45 சுங்க பரிசோதகர்கள் நியமிக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதற்குரிய  வர்த்தமானி அறிவித்தல் செப்டம்பர் 22 ஆம் திகதி காலை 9 மணிக்கு ஆரம்பமாகி ஒக்டோபர் 16 ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையவுள்ளது.

இது தொடர்பான விண்ணப்பம் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

21 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்டவர்களே இந்த பதவிகளுக்காக இணைக்கப்படவுள்ளதாக என நிதி இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post