வைத்தியர் றிஸ்மியா ரபீக் எழுதிய "அறிவும் ஆரோக்கியமும்” நூல் வெளியிட்டு விழா

Adjust the font size:     

நிந்தவூர் மாவட்ட ஆயுள்வேத வைத்தியசாலையின் சமூகநல மருத்துவ உத்தியோகத்தர் (திருமதி) ஆர்.எப்.றிஸ்மியா எழுதிய “அறிவும் ஆரோக்கியமும்” என்ற நூல் வெளியிட்டு விழா நேற்றைய முந்தய தினம் (04) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
 
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஐ.எல்.எம்.றிபாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்த நூல் வெளியீட்டு விழாவுக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் (திருமதி) ஜே.ஜே.முரளிதரன் பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி (திருமதி) இ.ஸ்ரீதர் கௌரவ அதிதியாகவும், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் எம்.பீ.அப்துல் வாஜித் விசேட அதிதியாகவும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
 
- அபு அலா 
 



 

How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post