ஜாக்சன் ஆண்டனியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக

Adjust the font size:     

மறைந்த ஜக்சன் ஆண்டனியின் பூதவுடல் இன்று (09) பிற்பகல் பொரளை ஜயரத்ன மலர்சாலையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

பூதவுடல் நாளை (10ஆம் திகதி) காலை 7.30 மணி முதல் இரவு 11 மணி வரை கொழும்பு 08, பௌத்தலோக மாவத்தையில் உள்ள "ஜயரத்ன ரெஸ்பெக்ட் ஹோம்" என்ற முகவரியிலும், 90/A, 58 வணிகசூரியவத்தை, ராகம வீதி, கடவத்தை என்ற முகவரியில் உள்ள அவரது இல்லத்தில்  அக்டோபர் புதன்கிழமை 11, மற்றும் 12 வியாழக்கிழமைகளில் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேடை, தொலைக்காட்சி நாடகம், சினிமா என தனது நடிப்புத்திறமையால் இலங்கையின் கலைத்துறையின் சளைக்காத நாடக ஆளுமை ஜாக்சன் ஆண்டனியின் இறுதிக் கிரியைகள் அடுத்த வியாழக்கிழமை பிற்பகல் ராகம ஹோலி பீட்டர் அண்ட் பால் தேவாலயத்தில் நடைபெறவுள்ளது.

How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post