மாத்தறை தியலபே தென்னபிட்டிஹேன பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்த மண்சரிவு காரணமாக 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மண்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு மக்கள் செல்ல வேண்டாம் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும், மண்சரிவினால் உயிர்ச்சேதம் எதுவும் இதுவரையில் பதிவாகவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தன்னபிட்டிஹேன பிரதேசத்தில் நேற்று (05) மீண்டும் மண்சரிவு பதிவாகியதையடுத்து, 10க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, காலி, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, கேகலை, மாத்தறை, இரத்தினபுரி மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாயம் தொடர்கிறது.
அத்தோடு எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் மேல், சப்ரகமுவ, தென், ஊவா, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் மெரில் மெண்டஸ் தெரிவித்துள்ளார்.
