முஹம்மது நபி நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த தினமான மீலாதுன் நபி தினம் இன்றாகும்

Adjust the font size:     

இஸ்லாத்தின் ஆசான் முஹம்மது நபியின் பிறந்த தினமான  மீலாதுன் நபி பண்டிகையை இன்று உலக இஸ்லாமிய மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

திஹாரி பள்ளிவாசல் தலைமை மவ்லவி முனீர் முலப்பர் பேசுகையில், மத வேறுபாடின்றி அனைவரும் அமைதியாகவும், நீதியாகவும் வாழக்கூடிய சூழலை உருவாக்க நபிகள் நாயகம் பெருமுயற்சி எடுத்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் நபி பெருநாள் வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்.

அக்காலகட்டத்தில் இஸ்லாத்தின் செய்தியை சமூகத்தில் முன்வைப்பதில் நபிகள் நாயகத்திற்கு ஏற்பட்ட கடுமையான அனுபவங்கள் கொஞ்ச நஞ்சமல்ல என ஜனாதிபதி சுட்டிக்காட்டுகிறார்.

நம்பிக்கை மற்றும் மனித நேயத்திற்காக அளவற்ற தியாகத்தின் பலனாக நபிகள் நாயகம் விரும்பிய வெற்றி கிடைத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post