வரலாற்றுச்சாதனை படைத்த ஓட்டமாவடி ஸாஹிறா மாணவி றிஸ்வான் ஸீனத் றிதா

Adjust the font size:     

நேற்று (27) நடைபெற்ற கிழக்கு மாகாண மட்ட தமிழ்மொழித்தின முதலாம் பிரிவு பேச்சுப்போட்டியில் ஓட்டமாவடி ஸாஹிறா வித்தியாலய மாணவி றிஸ்வான் ஸீனத் றிதா முதலாமிடத்தினைப்பெற்று தேசிய மட்டத்திற்குத்தெரிவாகி வரலாற்றுச்சாதனை படைத்துள்ளார்.
குறித்த மாணவி கடந்த 19.09.2023ம் திகதி வந்தாறுமுலை மத்திய மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற மாவட்ட மட்டப்போட்டியில் முதலிடம் பெற்று மாகாண மட்டப்போட்டிக்கு தெரிவாகியிருந்த நிலையில், தேசிய மட்டத்திற்குத் தெரிவாகியுள்ளதுடன், பாடசாலை வரலாற்றில் தேசிய மட்டத்திற்குத் தெரிவான முதல் மாணவி என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வரலாற்றுச்சாதனையை படைத்த மாணவிக்கும் பயிற்றுவித்து போட்டி நிகழ்ச்சிக்கு அழைத்துச்சென்று வெற்றிக்கு வழிகோலிய ஆசிரியை SI.றிஸ்வியா, வகுப்பாசிரியை றிஷானா இஸ்மாயீல், ஆரம்பக்கல்வியூடாக இம்முன்னேற்றத்திற்கு அடித்தளமிட்ட ஆசிரியை நஜீலா கஸ்ஸாலி மற்றும் ஊக்குவித்த மாணவியின் பெற்றோருக்கும் நன்றியினையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு, தேசிய மட்டப்போட்டியிலும் வெற்றி பெற்று சாதனை படைக்க வாழ்த்தி, பிரார்த்திப்பதாக பாடசாலையின் அதிபர் எம்.ஏ.அபூ தாஹிர் தெரிவித்துள்ளார்.

Image - Thehotlinelk
How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post