இரண்டாம் மொழி சிங்களம் நிகழ்ச்சித் திட்டத்தில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழும் பதக்கமும்

Adjust the font size:     

 

Cambridge City campus. நிறுவனத்தால் நடத்தப்பட்ட இரண்டாம் மொழி சிங்களம் நிகழ்ச்சித் திட்டத்தில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழும் பதக்கமும் வழங்கும்நிகழ்வு கடந்த 10 செப்டம்பர் 2023அன்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில். நடைபெற்றது.

அம்பாறை மாவட்டத்தில் இசங்கணிச்சீமை அல் கமர் வித்தியாலயத்திலிருந்து எட்டாம் வகுப்பில் கல்வி பயிலும் M.M.அல்மா ஜைனப் மற்றும் அக்கரைப்பற்று அரசினர் ஆண்கள் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் அப்துல் ஹமீட் றிஸீலா தம்பதியினரின் செல்வப் புதல்வன் A.H.உமர் ஹாமித் என்ற மாணவனும் தெரிவு செய்யப்படிருந்தனர்.
 
அம்பாறை மாவட்டத்தில் இருந்து இந்த இரண்டு மாணவர்கள் மாத்திரமே தெரிவு செய்யப்பட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையின் புகழ் பூத்த கல்வி அறிஞர்கள் வீற்றிருந்த சபையில்;  இரு மாணவர்களும் பலத்த கரகோஷத்தின் மத்தியில் தமக்கான சான்றிதழை பேராசிரியர் S.J. யோகராஜா அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.
 
இம்மாணவர்களின் பெற்றோர்களும் இவ்விழாவிற்கு அழைக்கப்பட்டிருந்தது சிறப்பம்சமாகும். அல்கமர் வித்யாலயத்தில். அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றும் திருமதி எம் எஸ் எப் பஸ்லினா அவர்கள் இதற்கான பயிற்சிகளை வழங்கியிருந்தார். திருமதி பஸ்லீனா ஆசிரியை அவர்களும் தனது பாராட்டினை மாநாட்டு மண்டபத்தில் பெற்றுக் கொண்டார்.
 
அல் கமர் வித்யாலய அதிபர் ஜனாப் ஹாஷிம் தாலிப் அவர்கள் இந்த விழாவிற்கு ஒரு சிறப்பு அதிதியாக அழைக்கப்பட்டிருந்தார். அவரும் பல மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கியதுடன். தனக்கான பாராட்டையும் பெற்றுக் கொண்டார்.
 
How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post