சிறுவர் மெய் வல்லுனர் போட்டியில் தரம் மூன்று பெண்கள் பிரிவில் அக்கரைப்பற்று சாஹிரா வித்தியாலய மாணவர்கள் 129 புள்ளிகள் பெற்று முதலாம் இடத்திற்கான வெற்றி கிண்ணத்தை சுவீகரித்து கொண்டனர்.
இப்போட்டிகள் அக்கரைப்பற்று வலய கல்வி பணியகத்தின் ஏற்பாட்டில் நேற்று 2023.09.09 சனிக்கிழமை அக்கரைப்பற்று அஸ் ஸிறாஜ் மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
அக்கரைப்பற்று வலயத்தில் உள்ள Primary பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற மேற்படி போட்டியில் வெற்றி ஈட்டிய பாடசாலைகளுக்கான வெற்றி கேடயத்தை அக்கரைப்பற்று வலய கல்வி பணியகத்தின் கல்வி பணிப்பாளர் மற்றும் உதவி கல்வி பணிப்பாளர் அவர்களினால் இன்று காலை வழங்கி வைக்கப்பட்டது.
ஸாஹிரா வித்தியாலய அதிபர் M.I.M. Ilyas மற்றும் பிரதி அதிபர் Nafeen Ismail ஆகியோரின் வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வையின் கீழ் பிள்ளைகளுக்கு சிறந்த முறையில் பயிற்சிகளை வழங்கிய அத்தனை ஆசிரியர்களுக்கும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கின்றோம்.
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
Education



