![]() |
| Image - Daily-sun.com |
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர் ஃபோர் சுற்றில் இந்திய அணிக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் வங்கதேச அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
266 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியால் 49 ஓவர்கள் 5 பந்துகளில் 259 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இந்திய அணிக்கு நம்பிக்கையை ஏற்படுத்திய ஷுப்மன் கில் 133 பந்துகளில் 5 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 121 ரன்கள் குவித்தார்.
அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லக் கடுமையாக முயற்சித்த அக்சர் பட்டேல் 34 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார்.
பந்துவீச்சில் முஸ்தாபிசுர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
மஹேதி ஹசன், தன்சிம் ஹசன் சாகிப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்தியாவுக்கு எதிராக முதலில் பேட் செய்த வங்கதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 265 ரன்கள் எடுத்தது.
பெறுமதியான இன்னிங்ஸை ஆடிய ஷகிப் அல் ஹசன் 85 பந்துகளில் 3 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 80 ரன்கள் எடுத்தார்.
தோவித் ஹிரிடோய் 54 ரன்களும், நசும் அகமது 44 ரன்களும் எடுத்தனர்.
ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்டுகளையும், முகமது ஷமி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
