நேபாளத்தில் பாடசாலை ஆசிரியர்களின் பாரிய வேலை நிறுத்தம் காரணமாக ஆயிரக்கணக்கான பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொடர்ந்து மூன்றாவது நாளாக தொடரும் வேலை நிறுத்தம் காரணமாக நாடு முழுவதும் உள்ள அரச பாடசாலைகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேபாள பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கல்வி சீர்திருத்த சட்டமூலத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த ஆசிரியர்களின் வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
World

