தேசிய மட்டத்திற்குத் தெரிவாகி எறாவூர் அலிகாருக்கு புகழ் தேடிக்கொடுத்த விளையாட்டு வீரர்களை வரவேற்கும் நிகழ்வு மிகச்சிறப்பாக நடைபெற்றது.
திங்கட்கிழமை (25) பாடசாலையின் அதிபர் எம்.எம்.மௌஜுத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் வலயக் கல்வி பணிப்பாளர் எஸ்.எம்.அமீர் பிரதம அதிதியாகக்கலந்து கொண்டதோடு, பிரதிக் கல்விப்பணிப்பாளர் திருமதி றிப்கா இம்தியாஸ் உட்பட பாடசாலையின் பழைய மாணவர்கள், பாடசாலை அபிருத்திச்சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள், உதைப்பந்தாட்ட இரசிகர்கள் எனப்பெருந்திரளானோர் பங்கேற்றிருந்தனர்.
எறிபந்துப்போட்டியில் பங்குபற்றிய பாடசாலையின் அணியினர் தேசிய மட்டத்தில் தெரிவு செய்யப்பட்டிருப்பதோடு, மாகாண மட்டத்தில் நடைபெறுகின்ற சுவட்டு நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்று தேசிய மட்டப்போட்டிக்குத் தெரிவாகியுள்ள மாணவர்களையும் கௌரவிப்பதாக பாடசாலையின் அதிபர் எம்.எம்.மௌஜுத் தெரிவித்தார்.
அத்தோடு, அகில இலங்கை ரீதியில் டிவிசன் 01 இல் போட்டியிட்ட பாடசாலையின் உதைப்பந்தாட்ட வீரர்கள் வெற்றி பெற்று அரையிறுதியாட்டத்திற்குள் நுழைந்திருப்பதையும் சுட்டிக்காட்டிய அதிபர், அவ்வீரர்களின் திறமைகளைப் பாராட்டியதோடு அனைத்து மாணவர்களையும் திறம்படப் பயிற்றுவித்து போட்டிக்கு ஆயத்தப்படுத்திய பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியர்களை வெகுவாக பாராட்டுவதாகவும் அவர்களின் அர்ப்பணிப்பான சேவைக்கு பாடசாலைச்சமூகம் சார்பான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாகவும் தெரிவித்தார்.
- எம்.எஸ்.எம்.றூமி (Thehotlinelk)
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
Eastern

