சேனையூர் மண்ணுக்கு பெருமை சேர்த்த சோபர் அணி

Adjust the font size:     

சிட்டிசன் மீடியா நெட்வேர்க் (Citiezen Media Network) நடாத்திய மின்னொளி மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியானது நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்தில் சுமார் ஏழு நாட்களாக நடைபெற்றது.

இதில் இப்பகுதியில் பிரபலம் வாய்ந்த 56 கழகங்கள் பங்குபற்றி பலப்பரீட்சை நடாத்தின. இந்த சுற்றுப் போட்டிகளில் அட்டாளைச்சேனை சோபர் அணியானது ஆரம்பம் முதலே தனக்கேயுரிய பாணியில் திறமையாக விளையாடி இறுதிப்போட்டி வரை முன்னேறியது.
 
ஏராளமான ரசிகர்கள் மத்தியில் நிந்தவூர் மண்ணிலே மின்னொளியிலே நடைபெற்ற இறுதிப்போட்டியிலே ஹிஜ்ரா விளையாட்டுக்கழகமும் அட்டாளைச்சேனை சோபர் கழகமும் பலமாக மோதிக்கொண்டன.
இறுதிவரை விறுவிறுப்பாக சென்ற இப்போட்டியானது கிரிக்கெட் போட்டிகளில் அரிதாக இடம்பெறும் இரு அணிகளும் சமம் என்ற நிலையில் நிறைவுற்றது. 
 
அதன் நிமித்தம் இரு அணிகளும் சுப்பர் ஓவர்" மூலம் வெற்றியை தீர்மானிக்க களமிறங்கின அதில் அட்டாளைச்சேனை சோபர் அணி வெற்றியை தனதாக்கியது. இதன் மூலம் இப்பருவ காலத்தில் நடைபெற்ற மின்னொளி கிரிக்கெட் சுற்றுத்தொடர்களில் ஒன்பதாவது தடவையாக சோபர் அணி வெற்றிக் கிரீடம் சூடியது.
 
இச்சுற்றுப் போட்டித்தொடரில் அரை இறுதி போட்டியின் ஆட்டநாயனாக சோபர் அணியின் ஜெசில் ஆசிரியர் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார் என்பதுடன் அவரே இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகனாகவும் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
NM.முஹமட் ஸாலிஹ்
 






How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post