வெள்ள அபாயத்தில் முக்கிய ஆறுகள் - பொதுமக்களுக்கு எச்சரிக்கை.

Adjust the font size:     

Image - www.chinadailyasia.com

தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக பிரதான ஆறுகளின் நீர்மட்டம் வெள்ள அபாய மட்டத்தில் உள்ளது. அவற்றுள், நில்வலா, கிங், மற்றும் களு கங்கையின் சிறிய துணை ஆறுகள் ஆகியவை பிரதானமானவை.

எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் வெள்ள அபாயம் தொடரும் என நீர்ப்பாசன திணைக்கள நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் பொறியியலாளர் எஸ்.பி.சி.சுகீஸ்வர தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணித்தியாலங்களில் அதிக மழைவீழ்ச்சி கண்டி மாவட்டத்தின் நாவலப்பிட்டியில்  பதிவாகியுள்ளது.

இது தவிர களுத்துறை மாவட்டத்தின் இரத்தினபுரி, அலபாத்த, காலி நெலுவ, நாகொட, வதுரவில மற்றும் புலத்சிங்கல, இங்கிரிய, பாஹியங்கல மற்றும் வல்லவிட்ட ஆகிய பிரதேசங்களிலும் அதிக மழை பெய்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post