பாடசாலைகளுக்கிடையிலான 2023 ம் ஆண்டுக்கான தேசியமட்ட மென்பந்து கிரிக்கட் போட்டியில் அக்கரைப்பற்று அஸ்- ஸிறாஜ் மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) அகில இலங்கை ரீதியில் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் இம்மாணவர்கள், பயிற்றுவிப்பாளர்கள், பாடசாலையின் அதிபர் ஏ.ஜீ.பஸ்மில் ஆகியோர்களை பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எஸ்.அஹமட் கியாஸ் தலைமையில் இன்று (25.09.2023) அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தில் இடம் பெற்றது.
அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.எம்.றஹ்மத்துல்லா பிரதம அதிதியாக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கம் அணிவித்தும், பயிற்றுவிப்பாளர்களுக்கு பரிசுப் பொதி வழங்கியும்,பாடசாலையின் அதிபர் ஏ.ஜீ.பஸ்மிலுக்கு பொன்னாடை போர்த்தியும் கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.ஹசீம்,உதவிக் கல்விப் பணிப்பாளர்களுக்கான எஸ்.அம்ஜத்கான், எஸ்.எம்.நௌபர்டின், ஏ.எம்.ஜெமீல், ஏ.எல்.பாயிஸ், கணக்காளர்கே.லிங்கேஸ்வரன், சேவைக் கால ஆசிரிய ஆலோசகர் எம்.ஏ.தாஹிர், நிர்வாக உத்தியோகத்தர் ஏ.எம்.றிம்சான் உட்பட உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
- றியாஸ் இஸ்மாயில்
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
Eastern


