பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இலங்கை கிரிக்கெட் வீரர் தனிஷ்க குணதிலக குற்றமற்றவர் என அவுஸ்திரேலிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்றத்தில் இது தொடர்பான முடிவை அறிவித்துள்ளது.
32 வயதான தனிஷ்க குணதிலக்க கடந்த நவம்பர் மாதம் இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்காக அவுஸ்திரேலியா சென்றிருந்த போது கைது செய்யப்பட்டார்.
அந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை 4 நாட்கள் நடைபெற்றது. இந்த குற்றச்சாட்டில் தனிஷ்க குணதிலக்க குற்றவாளி அல்ல என நீதிபதி சாரா ஹியுகம் தீர்ப்பை அறிவித்துள்ளார்.
அதன்படி, சம்பந்தப்பட்ட பெண் எழுப்பிய அனைத்து குற்றச்சாட்டுகளும் நிராகரிக்கப்பட்டுள்ளன.
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
Island
