பல மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்யலாம்

Adjust the font size:     

 

Image - Skymetweather.com

மேல் மாகாணம், சப்ரகமுவ மற்றும் வட மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும்.

கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தைக் குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மக்கள் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 


How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post