தரமுயர் சீருடைகளுடன் மிளிரும் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் பேண்ட் வாத்தியக் குழு

Adjust the font size:     

 

எமது அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் இணைப்பாட விதான செயற்பாடுகளின் ஒரு நகர்வாக புதிய பேண்ட் வாத்தியக் குழு மாணவர்கள் இணைக்கப்பட்டு அவர்களுக்கான பயிற்சிகள் பொறுப்பாசிரியரினால் வழங்கப்பட்டன.
 
இவ்வருடம் (2023) உருவாக்கம் பெற்ற இந்த பேண்ட் வாத்தியக் குழுவுக்கான சீருடைகள் இதுவரை இல்லாதவாறு தரமுயர்ந்த அழகிய தோற்றத்திலே தயாரித்து வழங்கப்பட்டுள்ளமையை அவதானிக்க முடிகிறது. 
 
இது மாணவர்களுக்கு மேலும் கம்பீரத்தை வழங்குவதுடன் குழுவை அழகுற காட்சிப்படுத்தி நிற்கிறது.
 
இச்சீருடையை நிர்மாணித்து வழங்க பல்வேறு வழிகாட்டல்களை வழங்கிய பாடசாலை அதிபர் ACM.ஹரிஸ் ஆசிரியர் அவர்களுக்கும் இதற்காக அயராது பாடுபட்டுழைத்த அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை பேண்ட் வாத்தியக்குழு பொறுப்பாசிரியர் KM.நஜிபுல்லாஹ் அவர்களுக்கும் பாடசாலை சமூகம் நன்றி கூறி நிற்கிறது.

- NM.முஹமட் ஸாலிஹ்

How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post