நாளை நாட்டில் கனமழை பெய்யும் பகுதிகள் இதோ

Adjust the font size:     

மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் நாளை அவ்வப்போது சாதாரண மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்தோடு; மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றர் வரையான பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.


How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post