இலங்கை இளையோர் தேசிய அணியினை பிரதிநிதித்துவப்படுத்தி தாய்வானில் நடைபெற்று முடிந்த 18 வயதுக்கு உட்பட்ட Youth Beach Tchoukball Championship போட்டியில் இலங்கை அணி முதல் தடவையாக புள்ளி பட்டியலில் ஐந்தாம் இடத்தைப் பெற்று World Championship போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
16 நாடுகள் பங்கு பற்றிய இப்போட்டியில் இலங்கைக்காக எமது அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனை மண்ணின் 7 வீரர்கள் கலந்து கொண்டனர். இவ் அணியின் பயிற்றுவிப்பாளராக தேசிய Tchoukball அணியின் சிரேஷ்ட வீரர் மற்றும் அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியின் பயிற்றுவிப்பாளர் Haneefa Safeer Ali கடமையாற்றினார். எமது ஊர் சார்பாகவும், மக்கள் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
Sports

