அக்கறைப்பற்று அஸ்சிராஜ் மகா வித்தியாலயத்தின் கல்விச் சுற்றுலா

Adjust the font size:     

அக்கறைப்பற்று அஸ்சிராஜ் மகா வித்தியாலயத்தின் கல்விச் சுற்றுலா

நேற்றைய தினம் (08/08/2023) தரம் - 1, 2 ஆகிய வகுப்பு மாணவர்கள், ஆசிரியர்கள் சகிதம் ஆடைத் தொழிற்சாலை, சீனித் தொழிற்சாலை, ஓட்டுத் தொழிற்சாலை, நீர்ப் பூங்கா மற்றும் மதஸ்தானங்கள் என,
பல்வேறுபட்ட சமூகவியல், தொழிற்பயிச்சி நெறி மற்றும் உற்பத்தி மையங்களின் பயன்பாடு, வினைத்திறன்மிக்க அறிவுசார் செயற்பாடுகளை மாணவச் சிறார்களுக்கு காண்பித்து மகிழ்ச்சிப்படுத்தியதோடு, மனவிருத்திருத்திக்கும் வித்திட்டிருக்கும் என்பதில் எதுவித மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது
இச் சுற்றுலாவானது எமது மாணவச் சமூகத்தின் சவால்மிக்கதான எதிர்கால வாழ்க்கை முறைமைக்கும், தொழிற்துறைசார் அறிவினை வளர்த்துக் கொள்வதற்கும் வழிகாட்டியாக அமைந்துள்ளதோடு, மாணவச் சிறார்களின் தொழில்நுட்ப சிந்தனை விருத்தியையும் அதிகப்படுத்துவதற்கு உதவும் என்பதில் எதுவித ஐய்யப்பாடும் இல்லை.

- Rizwan





How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post