கந்தரோடை அமைவிடம் - யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமப் பிரிவில், உடுவில் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஒரு ஊர். இவ்வூரின் வடக்கு எல்லையில் மாசியப்பிட்டி, மல்லாகம் ஆகிய ஊர்களும், கிழக்கு எல்லையில் சுன்னாகம், உடுவில் ஆகிய ஊர்களும், தெற்கில் சங்குவேலியும், மேற்கில் சண்டிலிப்பாயும் உள்ளன. சுன்னாகத்தில் இருந்து மாசியப்பிட்டிக்குச் செல்லும் வீதியில், சுன்னாகத்தில் இருந்து சுமார் ஒரு மைல் தொலைவில் இவ்வூர் அமைந்துள்ளது.
வட இலங்கையிலுள்ள மிக முக்கியமான தொல்லியல் மையமாக கந்தரோடை விளங்குகிறது. இவ் மையமானது 1917 ஆம் ஆண்டளவில் P.E. Pieris அவர்களால் தொல்லியல் மையமாக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து இங்கு 1967, 1970, 2011, 2018, 2019 முதலான ஆண்டுகளில் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இவ் ஆய்வுகளின் போது கிடைக்கப்பெற்ற சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு, பெருங்கற்காலப் பண்பாட்டை வெளிப்படுத்தி நிற்கும் மையம் என்பது உறுதி செய்யப்பட்டதோடு, வட இலங்கையில் 2500 ஆண்டுகளுக்கு முன்பே நகரமயமாக்கம் இடம்பெற்ற மிகப்பெரிய குடியிருப்பு மையமாகவும் விளங்கியிருந்தது என்பதும் உறுதிசெய்யப்பட்டது.
நீண்ட காலத்திற்கு பின்னர் கந்தரோடையில் மீண்டும் 7 July 2023 இல் அகழ்வாய்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இவ் ஆய்வானது German Archaeological Institute & Commission for Archaeology of Non- European Cultures" ஆகிய நிறுவனத்தின் ஒத்துழைப்போடு Dr.Ariane de Saxcè அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி, Department of Archaeology இணைந்து Dr.Nimal Perera தலைமையில் இவ் ஆய்வு முன்னெடுக்கப்பட்டது.
இவ் ஆய்வில் University of Jaffna, University of Rajarata & University of Kelaniya மாணவர்களும் பங்கு கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ் ஆய்வின் நோக்கம்- வரலாற்றுக்கு முற்பட்ட காலம் பற்றிய சான்றாதாரங்கள் உள்ளதா என்பதை கண்டறிவதாகும்.
அதற்கான காரணம், 2019 இல் Dr.NimalPerara (Prehistorical_Archaeologist) நடாத்திய ஆய்வின் போது வரலாற்றுக்கு முற்பட்ட கால கருவியொன்று கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அது அச்சூலியன் பண்பாட்டை ஒத்திருந்ததாகவும் கூறப்பட்டதோடு அதனை Professor Kirushnaraja & Dr. Theraniyagala ஆகியோரும் உறுதிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனை அடிப்படையாகக் கொண்டே Dr. Nimal Perara அவர்களால் தற்போது (7th July 2023) கந்தரோடையில் Pre Historic பண்பாடு உள்ளதா என்பதைக் கண்டறிய ஆய்வு நடாத்தப்பட்டது.
இவ் ஆய்வின் போது 3×3 என்ற அளவுத்திட்டத்தில் குழி அமைக்கப்பட்டு செங்குத்து அகழ்வாய்வு (Vertical Excavation) மேற்கொள்ளப்பட்டது. 4.8m ஆழம் வரையில் 42 மண்படைகள் (Layers) இனங்காணப்பட்டு அவற்றிலிருந்து பல தொல்லியல் சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதில் நுண்கற்காலம் மற்றும் பெருங்கற்காலப் பண்பாட்டுக்குரிய சான்றுகள் கிடைக்கப்பெற்ற போதும் வரலாற்றுக்கு முற்பட்ட கால சான்றாதாரங்கள் கிடைக்கப்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ் அகழ்வாய்வின் போது கல்மணிகள், பல வகையான எலும்பு எச்சங்கள், நாணயங்கள், மட்பாண்டங்கள் முதலான பல சான்றுகள் கிடைக்கப்பெற்றன. எனினும் இவ் சான்றாதாரங்கள் தொடர்பான உறுதியான முடிவுகள் எதுவும் தற்போது வெளியிடப்படவில்லை.
ஜூலை 7 இல் ஆரம்பிக்கப்பட்ட இவ் ஆய்வு இன்றுடன் (ஆகஸ்ட் 19) நிறைவு பெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
- Sayanthini Uthayakumaran
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
Island

