பொத்துவில் இரவு நேர கிரிக்கெட் தொடர் ஒன்றினை மிகவும் சிறப்பான முறையில் நேர்த்தியாகவும் பொத்துவில் ரொக் சலஞ்சஸ் விளையாட்டுக்கழகம் தனது 13 ஆண்டு கால நிறைவினையொட்டி ஏற்பாடு செய்தது.
விலகல் முறையிலான இத்தொடரில் பொத்துவில் முன்னனி கழகங்கள் 32 பங்கு கொண்டனர்.ஆரம்பம் முதல் இறுதி போட்டி வரை சிறப்பான ஒரு தொடராகவே இருந்தமை பாராட்டத்தக்க விடயமாகும்.
இத்தொடரில் பல முன்னனி கழகங்களை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு பொத்துவில் ரொக் சலஞ்சஸ் விளையாட்டுக்கழகமும் பொத்துவில் பவர் போய்ஸ் விளையாட்டுக்கழகமும் தெரிவு செய்யப்பட்டது.
பலத்த எதிர்பார்ப்புடன் இரு அணிகளும் ஒன்றை ஒன்று மோதிக் கொண்டு இறுதியில் சம்பியன் பட்டத்தினை பொத்துவில் பவர் போய்ஸ் விளையாட்டுக்கழகம் தனதாக்கிக் கொண்டது இதனால் இரண்டாம் இடத்தினை பொத்துவில் ரொக் சலஞ்சஸ் விளையாட்டுக்கழகம் பெற்றுக் கொண்டது.
சம்பியன் பட்டத்தினை தனதாக்கிக் கொண்ட பொத்துவில் பவர் போய்ஸ் விளையாட்டுக்கழகத்திற்கும் இரண்டாம் இடத்தினை பெற்ற பொத்துவில் ரொக் சலஞ்சஸ் விளையாட்டுக்கழகத்திற்கும் பாராட்டுக்களையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
சிறந்த தொடர் ஒன்றினை ஏற்பாடு செய்து நடாத்திய பொத்துவில் ரொக் சலஞ்சஸ் விளையாட்டுக்கழகத்திற்கு வாழ்த்துக்கள்.
