கத்தாரில் செயல்பட்டுவரும் மெட்ராஷில் (Metrash) செயலி என்பது பொது மக்கள் தொடர்பான புகார்களை அநாமதேயமாக (தங்களை வெளிப்படுத்தில் கொள்ளாமல்) தெரிவிக்கும் அமைப்பாகும். இந்நிலையில் அல் அதீத் (Al Adeed) சேவை மெட்ராஷில் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பொது இடங்களில் நடக்கும் மோசமான செயல்கள், சுற்றுலா மையங்களில் நடக்கும் சட்ட மீறல்கள், அதிகாரிகளின் ஊழல்கள் போன்றவற்றை, புகார்தாரரின் தகவல்கள் தெரியாமல், சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவிக்கலாம்.
பூர்வீகவாசிகள் மற்றும் குடியிருப்பாளர்கள் தங்கள் தகவல்களை ரகசியமாக தெரிவிக்கும் வசதி மெட்ராஷில் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பொது ஒழுக்கங்கள் மற்றும் எதிர்மறையான அணுகுமுறைகள் தவிர, அச்சுறுத்தல்களை மெட்ராஷில் உள்ள 'அல் அதீத்' மூலம் அதிகாரிகளுக்கு தெரிவிக்கலாம்.
சமூகப் பாதுகாப்பை இலக்காகக் கொண்டு Metrash, Preventive Security Reporting என்ற புதிய சேவையைத் தொடங்கியுள்ளது. மெட்ராஷ் பயன்பாட்டில் 'Communicate with Us எங்களுடன் தொடர்புகொள்' என்ற தேர்ந்தெடுப்பில் உள்ள ''Preventive Security' விண்டோஸின் கீழ் 'Al Adeed' சேவை கிடைக்கிறது.
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
Middle East
