போட்டி நிகழ்வுகளில் பங்கு பற்றி வெற்றியீட்டிய அல்-பஹ்ரியா வித்தியாலய மாணவ மணிகளுக்கு பாராட்டு

Adjust the font size:     

 



பொத்துவில் அக்/அல்-பஹ்ரியா வித்தியாலயம் சார்பாக இவ்வாண்டு இடம்பெற்ற கோட்டமட்ட ஆங்கில தினம்,வலயமட்ட ஆங்கில தினம், வலயமட்ட சிங்கள தினம், கோட்ட மட்ட தமிழ் தினம் போன்ற போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் மற்றும் கணித ஒலிம்பியாட் போட்டி நிகழ்வில் மாகாண மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவனுக்கும், சமூக விஞ்ஞான போட்டி நிகழ்வில் மாகாண மட்ட போட்டியில் பங்கு பற்றி தேசிய மட்டத்திற்கான எதிர்பார்ப்போடு இருக்கும் மாணவர்களுக்கும், அத்தோடு விளையாட்டுப் போட்டி நிகழ்வுகளில் மாகாண மட்ட போட்டி நிகழ்வுகளுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவ வீரர்களுக்கும் சிறப்பு மிக்க பாராட்டு மற்றும் ஊக்குவிப்பு நிகழ்வொன்று அதிபர் ஜனாப் HRM.கலீல் அவர்களின் தலமையில் இன்று விஷேட நிகழ்வாக இடம்பெற்றது.

இவர்களை வழிநடாத்தி ஊக்கப்படுத்தி வழியனுப்பிய அதிபர்கள், பொறுப்பாசிரியர்கள், ஏனைய ஆசிரிய ஆசிரியர்கள், சக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவர்களுக்கும் நன்றிகளும்.பாராட்டுக்களும்.

- Fouser Umar

How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post