அக்கரைப்பற்று அஸ்சிராஜ் மகாவித்தியாலயத்திற்கு கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் மேலங்கிகள் அன்பளிப்பாக வழங்கிவைப்பு

Adjust the font size:     

 அக்கரைப்பற்று அஸ்சிராஜ் மகாவித்தியாலயத்தின்  நீண்ட காலத் தேவையாகக் காணப்பட்ட எமது கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் அணிகளுக்கான மேலங்கிகள் "Moon Knight Studio" நிறுவனத்தினரால் கடந்த வெள்ளிக்கிழமை அதிபர் மற்றும் விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் விளையாட்டு பொறுப்பாசிரியர்களிடம் கையளிக்கப்பட்டது.

 
இந்நிகழ்வானது பாடசாலை விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களான M.முஸ்னிக், Mim.மிப்றான் ஆகியோரின் தலைமையில் பாடசாலை அதிபர், பிரதி,உதவி அதிபர்கள், ஆசிரியர்கள்,SDEC உறுப்பினர்கள்,OBA அங்கத்தவர்கள், Moon Knight Studio நிறுவனத்தினர்,விளையாட்டு வீரர்கள் பங்குபற்றலுடன் விமர்சையாக இடம்பெற்றது.
 
இதற்காக நிதியுதவி செய்த Moon Knight Studio நிறுவனத்தாருக்கும் 2012 Advance Level, 2018 Ordinary  Batch பழைய மாணவர்களுக்கும் பாடசாலை சமூகம் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறது.

 















How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post