கல்வி அமைப்பில் உள்ள குறைபாடுகளுக்கு பொறுப்பேற்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, இந்தியாவின் புதுடெல்லியில் தொடங்கிய இளைஞர்கள் போராட்டம் சூடுபிடித்துள்ளது.
பரீட்சை வினாத்தாள்கள் கசிந்ததைத் தொடர்ந்து 2.2 மில்லியன் மருத்துவப் பரீட்சார்த்திகள் மீண்டும் பரீட்சைக்குத் தோற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதைத் தொடர்ந்து ‘கரப்பான் பூச்சி இயக்கம்’ என்ற இளைஞர் அமைப்பினால் இந்தப் போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று (21) 10,000 இற்கும் அதிகமானோர் பாராளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல முற்பட்ட போது, பொலிசார் கடுமையாக தாக்கினர். எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரி பிரியங்கா மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களும் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இந்திய பொலிஸார் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை கைது செய்து விடுதலை செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த மோதலில் 60 போராட்டக்காரர்கள் மற்றும் 118 பாதுகாப்பு மற்றும் போலீஸ் அதிகாரிகள் உட்பட சுமார் 180 பேர் காயமடைந்ததாகவும், சுமார் 70 போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டதாகவும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.