நுகர்வோர் பாதுகாப்புக்காக நுகர்வோர் பொருட்களின் தரம் குறித்து ஆராயும் 'V-Standards' தேசிய வேலைத்திட்டம் இன்று (28) பெத்தாவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இது தூய்மையான இலங்கை தேசிய வேலைத்திட்டத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படுவதுடன், தேசிய தூய்மை வாரத்தை முன்னிட்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சிறப்புத் திட்டத்தின் கீழ், தெருவோர உணவு, தேங்காய் எண்ணெய், பொம்மைகள், வெல்லம் மற்றும் தேன், அழகுசாதனப் பொருட்கள், மின்சாதனப் பொருட்கள் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு, பெட்டா பொதுச் சந்தையில் அமைந்துள்ள கடைகளுக்குச் சென்று நுகர்வோர் பொருட்களின் தரத்தை சரிபார்க்க மாதிரிகள் சேகரிக்கப்படும்.
இலங்கையில் நுகர்வோர் பாதுகாப்பை உறுதி செய்வதும் தரமற்ற பொருட்கள் சந்தையில் புழக்கத்தில் விடுவதை தடுப்பதும் இந்த வேலைத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
நுகர்வோருக்கு தரமான பொருட்களை வழங்குவதுடன், தரமான பொருட்களை உற்பத்தி செய்ய உள்ளூர் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.