சாமர சம்பத், நாமல் ராஜபக்ஷ, தயாசிறி ஜயசேகர, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்டோர் ஒன்றிணைந்து நீதிபதிகளின் பதவிக் காலத்தை நீடிக்கக் கூடாது என கோரிக்கை விடுத்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ரத்னசிறி தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை சட்டவிரோதமான முறையில் பதவி நீக்கம் செய்வதற்கு இதே குழுவினரே இதற்கு முன்னர் இணைந்து செயற்பட்டதாகவும் நீதித்துறை மீது கற்களை வீசி எறியும் வரை சென்றதாகவும் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.
இதே குழுவினர் தற்போது நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீடிக்கக் கூடாது என பிரகடனப்படுத்தி வருவதாகவும், இவ்விடயம் தொடர்பில் பேசுவதற்கு அவர்களுக்கு எவ்வித தார்மீக உரிமையும் இல்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ரத்னசிறி மேலும் குறிப்பிட்டார்.