சசனரக்ஷக சங்க சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மகா சங்க மாநாடு இன்று (27) கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது.
சம்புத்த சாசனம் எதிர்நோக்கும் தீங்கான நிலைமையை எதிர்த்துப் போராடும் நோக்கில் 'சுக சங்கஸ்ஸ சமக்கி' என்ற தொனிப்பொருளில் இந்த சங்க மாநாடு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த மாபெரும் மாநாடு இன்று பிற்பகல் 2.00 மணிக்கு கொழும்பு கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் நடைபெற உள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பல்வேறு சமய நெருக்கடிகளை நிவர்த்தி செய்வதற்கான பிரேரணை ஒன்று ஏற்றுக்கொள்ளப்பட்டு அதிகாரிகளிடம் முன்வைக்கப்படும் என நம்புவதாக சாசனரக்ஷக சங்க சபையின் இணைப்பாளர் வணக்கத்துக்குரிய உலப்பனே சுமங்கல தேரர் தெரிவித்தார்.
#facing
#theme
#today
#religious
#various
#sasana
#stated
#ulapane
#colombo
#centre
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
News