தெவிநுவர, உத்பலவண்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த எசல பெரஹரவில் கடந்த வருடம் இடம்பெற்ற 45 காவடி நடனக் குழுக்களுக்கு இம்முறை பெரஹெராவை நடத்துவதற்கு அனுமதி வழங்க பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தீர்மானித்துள்ளார்.
மாத்தறை அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இன்று (27) பிற்பகல் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.
பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன, பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, மாத்தறை மாவட்ட செயலாளர் சந்தன திலகரத்ன உள்ளிட்ட பலர் கலந்துகொண்ட இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
நாளை (28) நடைபெறவுள்ள ஊர்வலத்திற்கு மேலதிக பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸாரை பாதுகாப்புக்காக ஈடுபடுத்தவும் இந்த கலந்துரையாடலின் போது மேலும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.