2024/25 கல்வியாண்டுக்கான மஹாபொல புலமைப்பரிசில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு அறிவிப்பு

Adjust the font size:     

2024/25 கல்வியாண்டுக்கான மஹாபொல புலமைப்பரிசில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் இணையவழிப் பதிவு எதிர்வரும் 17ஆம் திகதியுடன் நிறைவடைய உள்ளதாக லலித் அத்துல்முதலி மஹாபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நம்பிக்கை நிதியம் தெரிவித்துள்ளது.

இதன்படி, உரிய நன்மைக்கான இறுதித் தேர்வு ஆவணங்கள் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நிதியத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பெயர்கள் உள்ளடங்கியுள்ள மாணவர்கள் ஆகஸ்ட் 17ஆம் திகதிக்கு முன்னர் https://mahapola.lk/BankApp2025/ என்ற இணையத்தளத்திற்குச் சென்று தமது தேசிய அடையாள அட்டை இலக்கத்தைப் பயன்படுத்தி இணையவழிப் பதிவை நிறைவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024/25 கல்வியாண்டுக்கான மஹாபொல புலமைப்பரிசில் தெரிவு செய்யப்படாத மாணவர்களின் மேன்முறையீடுகள் ஒக்டோபர் 15ஆம் திகதிக்கு முன்னர் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டுமென மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#lalith #states #national #commission #statement #october #using #universities #httpsmahapolalkbankapp2025 #registration
How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post