சாரதிகள் மற்றும் பயணிகள் இருபாலருக்கும் நியாயமான புதிய யுகத்திற்கு நாட்டின் டாக்சி தொழிற்துறையை கொண்டு செல்லும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட இலங்கையின் புதிய உள்ளூர் டாக்ஸி சேவையான HelaGo நாளை (28) குருநாகல் பயணிகளுக்காக திறந்து வைக்கப்படவுள்ளது.
இதற்காக குருநாகல் மாவட்டத்தில் உள்ள சாரதிகளை தயார்படுத்தும் முகமாக இன்று (27) குருநாகலில் HelaGo சாரதி சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், பெருமளவிலான சாரதிகள் கலந்துகொண்டனர்.
ஹெலகோ டாக்சி சேவையைப் பயன்படுத்தும் குருநாகல் பயணிகளுக்கு நாளை முதல் ஆகஸ்ட் மாதம் முழுவதும் 27% சிறப்பு தள்ளுபடி வழங்கவும் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
HelaGo, 100% உள்நாட்டில் சொந்தமான இலங்கை வாடகைக் கார் சேவை, நாட்டின் டிஜிட்டல் தொழில்நுட்பத் துறையில் முன்னணியில் இருக்கும் ஹெலகுரு மற்றும் போக்குவரத்துத் துறையில் முன்னோடியான டேவிட் பீரிஸ் குழுமத்தால் தொடங்கப்பட்ட ஒரு தனித்துவமான முயற்சியாகும்.
பயணிகள் கீழே உள்ள HelaGo செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஹெலகோ மூலம் செல்க: https://link.helago.lk/go