நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது தொடர்பில் வாக்கெடுப்பு நடத்த வேண்டிய அவசியமில்லை என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர், அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இதன்படி, இன்று (28) இடம்பெற்ற அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர், இலங்கையின் அரசியலமைப்பில் உள்ள எந்தவொரு சரத்துக்கும் நீதித்துறை அதிகாரிகளின் எண்ணிக்கையையோ அல்லது அவர்களது ஓய்வு பெறும் வயதையோ திருத்துவதற்கு பொதுவாக்கெடுப்பு தேவையில்லை என தெரிவித்தார்.
இதன் காரணமாக சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்வது தேவையற்றது என்றும் அர்த்தமற்ற செயலாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மக்கள் வழங்கிய ஆணைக்கு இணங்க, நீதித்துறை மற்றும் சட்டத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துவதும், நீதித்துறைக்குள் நிலுவையில் உள்ள வழக்குகளை முறையாகக் குறைப்பதும் பொதுமக்களின் முதன்மையான எதிர்பார்ப்புகளில் ஒன்றாகும் என்றும் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்தார்.