அரசை பேணுவதற்கு மக்கள் பாரியளவிலான நிதியை செலவிடுவது நியாயமற்றது என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, 9 வீதமாக இருக்கும் மீள் செலவினங்களைக் குறைத்து 4 வீதமாக மூலதனச் செலவை அதிகரிப்பதை இலக்காகக் கொண்டு எதிர்வரும் வருடத்திற்கான பொருளாதாரத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக நேற்று (28) பிற்பகல் நடைபெற்ற காலி மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதி தெரிவித்தார்.
2027 ஆம் ஆண்டில் மூலதனச் செலவீனமாக இரண்டு இலட்சம் கோடி ரூபாவை ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இது சுமார் 40% அதிகரிப்பாகும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விதிகளின் கீழ் காலி மாவட்ட அபிவிருத்தித் திட்டம் உட்பட காலி மாவட்ட செயலகத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் 2027ஆம் ஆண்டுக்கான நிதித் தேவைகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.
அதற்கான அறிவிப்பு கீழே உள்ளது.