டெங்கு பாதிப்பு எண்ணிக்கை 82 ஆயிரத்தை தாண்டியுள்ளது

Adjust the font size:     

இந்த வருடத்தில் இதுவரை 82,011 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

டெங்கு காய்ச்சலால் இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.

மேல் மாகாணம் அதிக நோயாளர்களைக் கொண்ட மாகாணமாக பதிவாகியுள்ளதுடன், அங்கு 43,388 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

தென் மாகாணத்தில் 12,419 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக ஆபத்துள்ள பகுதிகளை இலக்கு வைத்து டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டங்கள் மேலும் அமுல்படுத்தப்பட்டுள்ளன.

#control #targeting #highest #western #programs #people #national #there #areas #stated
How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post