ஜனநாயகத்தையோ நீதித்துறையையோ தொடாதே - சஜித்

Adjust the font size:     

நீதி மற்றும் நியாயத்தை உறுதிப்படுத்தும் நீதித்துறை, சட்டத்தின் ஆட்சி மற்றும் கோட்பாடுகளை பாதுகாக்க சமகி ஜன பலவேகய (SJB) எப்போதும் தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், ஜனநாயகம் அல்லது நீதித்துறையில் அரசாங்கம் தலையிட வேண்டாம் என்றும், ஜனநாயக விழுமியங்களை வலுப்படுத்தும் புதிய அரசியலமைப்பில் கவனம் செலுத்துமாறும் கேட்டுக் கொண்டார்.

தற்போதைய அரசாங்கம் நீதித்துறையில் செல்வாக்கு செலுத்துவதற்கான பொது ஆணையைப் பெறவில்லை, மாறாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கி ஜனநாயகத்தை வலுப்படுத்தும் புதிய அரசியலமைப்பை ஸ்தாபிக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை மாற்றியமைப்பது அரசாங்கத்திற்குக் கிடைத்த ஆணையில் ஒருபோதும் உள்ளடக்கப்படாத ஒன்று என மேலும் வலியுறுத்திய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இவ்வாறான நடவடிக்கைகளை எடுப்பது நாட்டில் உள்ள அனைத்து பிரஜைகளின் மனித மற்றும் அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும் என்றும் எச்சரித்தார்.

#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்

How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post