நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற படுகொலைகளுக்கு அரசாங்கமும் சிறைச்சாலைகள் திணைக்களமும் முழுப்பொறுப்பேற்க வேண்டும் என கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழுவின் சாந்த விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
இன்று (08) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், 'புரு மூனா' அல்லது 'சுரேஷ்' போன்ற தனிநபர்கள் மீது பழியை சுமத்தி அரசாங்கம் தனது பொறுப்புக்கூறலில் இருந்து தப்பிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களில் இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளதால், இது தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் அல்ல என்றும் அவர் வலியுறுத்தினார்.
கைதிகளுக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், அதிகாரிகளின் உடல்களுக்கு அருகில் சென்று கதறி அழுதார் அமைச்சர். கைதிகளும் அமைச்சின் கண்காணிப்பில் இருப்பதால், அமைச்சர் வெறும் அதிகாரிகளின் சடலங்களை கட்டிப்பிடித்து துக்கம் அனுஷ்டிக்கக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான அழுகையின் மூலம் நீதியை நிலைநாட்ட முடியாது எனவும், இது அமைச்சர் அதிகாரிகளின் பக்கம் செயற்படுவதையே சுட்டிக்காட்டுவதாகவும் சாந்த விஜேசூரிய மேலும் தெரிவித்துள்ளார். சிலர் துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்த முயற்சிக்கின்ற அதேவேளை, அவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முற்றிலும் உரிமை இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்