ஒரு கிலோகிராம் ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் வத்தளை பகுதியில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்படி, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில், சந்தேகநபரிடம் இருந்து 1.140 கிலோகிராம் ஐஸ் மற்றும் 538 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர் மட்டக்குளியைச் சேர்ந்த 36 வயதுடைய பெண் எனவும், சம்பவம் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்