நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலின் பின்னர் மாற்றப்பட்ட கைதிகள் மீது எந்தவிதமான துஷ்பிரயோகமும் செய்யப்படவில்லை - மனித உரிமைகள் ஆணைக்குழு நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலின் பின்னர் மாற்றப்பட்ட கைதிகள் மீது எந்தவிதமான துஷ்பிரயோகமும் செய்யப்படவில்லை - மனித உரிமைகள் ஆணைக்குழு - Theevukaran News நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலின் பின்னர் மாற்றப்பட்ட கைதிகள் மீது எந்தவிதமான துஷ்பிரயோகமும் செய்யப்படவில்லை - மனித உரிமைகள் ஆணைக்குழு நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலின் பின்னர் மாற்றப்பட்ட கைதிகள் மீது எந்தவிதமான துஷ்பிரயோகமும் செய்யப்படவில்லை - மனித உரிமைகள் ஆணைக்குழு
Update:Welcome to Theevukaran.comVersion 2.1

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலின் பின்னர் மாற்றப்பட்ட கைதிகள் மீது எந்தவிதமான துஷ்பிரயோகமும் செய்யப்படவில்லை - மனித உரிமைகள் ஆணைக்குழு

Adjust the font size:     

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலை அடுத்து வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகள் மீது எந்தவிதமான துஷ்பிரயோகமும் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, இதுவரை மேற்கொள்ளப்பட்ட அவதானிப்புகளின் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஆணையாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து கைதிகள் மாற்றப்பட்ட பூஸ்ஸ, அங்குனகொலபெலஸ்ஸ, வெலிக்கடை உள்ளிட்ட பல சிறைச்சாலைகளில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள கைதிகளையும் சந்தித்து அவர்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், எதிர்காலத்தில் கைதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள ஏனைய சிறைச்சாலைகளையும் மனித உரிமைகள் ஆணைக்குழு கண்காணிக்க உள்ளதாக சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா மேலும் தெரிவித்தார்.

#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்



Previous Post Next Post