எரங்க குணசேகர மற்றும் ஜகத் மனுவர்ண ஆகியோருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது

Adjust the font size:     

நகர அபிவிருத்தி பிரதியமைச்சர் எரங்க குணசேகர, நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண உள்ளிட்ட ஆறு பேருக்கு பிடியாணை பிறப்பிக்குமாறு கோட்டை மேலதிக நீதவான் கிங்ஸ்லி ஹெட்டியாராச்சி இன்று (17) உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, நீதிமன்ற உத்தரவை மீறி சட்ட விரோதமாக சபையில் அங்கம் வகித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் வழக்கு விசாரணையில் பிணையில் இருக்கும் இவர்கள் திறந்த நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தினால் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிணைமுறிகளுக்கு பிடியாணை பிறப்பித்த பதில் நீதவான் வழக்கு விசாரணையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 4ஆம் திகதி வரை ஒத்திவைக்க உத்தரவிட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்

How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post