அரிசியை குத்தகை முறையின் கீழ் விற்பனை செய்ய எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆராச்சி தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், வங்குரோத்து எதிர்கட்சியானது ஒரு நாள் அல்லது ஒரு வார காலம் வாழ்வதற்காக ஊடகங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக எதையும் தேட முயற்சிப்பதாகவும், இதன் விளைவாக அவர்கள் இதனை பேசும் பொருளாக மாற்றியுள்ளதாகவும் தெரிவித்தார்.
நெல் சந்தைப்படுத்தல் சபையின் அரச செயற்பாடுகளை செயற்படுத்தி அதன் மூலம் நுகர்வோருக்கு சலுகை விலையில் அரிசியை விற்பனை செய்வதன் மூலம் சந்தையில் அரசுக்கு உரிய பங்கைப் பேணுவதுடன் விவசாயியைப் பாதுகாப்பதே அரசாங்கத்தின் உண்மையான நோக்கமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்