2026 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் கீழ் அமுல்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் பற்றிய மீளாய்வு மற்றும் 2027 ஆம் ஆண்டிற்கான எரிசக்தி அமைச்சு தொடர்பான முன்கூட்டிய கலந்துரையாடல் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
இதன்படி, 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் கீழ் எரிசக்தி அமைச்சினால் அமுல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களின் முன்னேற்றம், இந்த வருடத்தில் பூர்த்தி செய்யக்கூடிய திட்டங்கள் மற்றும் எதிர்வரும் வருடத்திற்கான ஒதுக்கீடு தேவைகள் என்பன இங்கு விரிவாக ஆராயப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
டெல்ஃப்ட், அனலத்தீவு மற்றும் நயனதீவு தீவுகளில் அமுல்படுத்தப்பட்டு வரும் கலப்பின புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்பின் (HRES) திட்டத்தின் முன்னேற்றத்தை ஜனாதிபதி மீளாய்வு செய்ததுடன், இந்த தீவுகளை 'பசுமை ஆற்றல் தீவுகளாக' அபிவிருத்தி செய்வதற்கும் மேம்படுத்துவதற்கும் கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு கீழே.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்