நாட்டில் எந்தவொரு பிரச்சினையும் எழுந்தால் எதிர்க்கட்சிகளின் உடனடி எதிர்வினை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸின் இல்லத்தில் ஒன்றுகூடுவதாக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், டெங்கு, சிறைச்சாலை நெருக்கடி, வெள்ளம், மத்திய கிழக்கு மோதல் அல்லது நிலக்கரி ஏற்றுமதியில் தாமதம் என எதுவாக இருந்தாலும், எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா பிரேரணையை உருவாக்குவதற்காக ஜி.எல்.பீரிஸின் வீட்டிற்கு செல்வதாக குறிப்பிட்டார்.
பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வரப்போவதாக எதிர்க்கட்சிகள் முன்னர் அறிவித்திருந்த போதிலும், அவர்கள் அதனை நிறைவேற்றத் தவறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்குப் பதிலாக நீதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வரத் தீர்மானித்தால், அதற்கு முகம் கொடுக்க அரசாங்கம் முழுமையாகத் தயாராக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும், சிறைச்சாலைகளில் நெரிசலைக் குறைக்கும் வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், வீட்டுக் காவலில் வைப்பது தொடர்பான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த பிரேரணையை அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தெரிவித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இது நடைமுறைப்படுத்தப்பட்டாலும் சாதாரண கைதிகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும் எனவும், அரசியல்வாதிகளுக்கு இது பொருந்தாது எனவும் வலியுறுத்தினார்.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்